ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
ஆரணியில் தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கத்தின் 41-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் கோ.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். சங்க முன்னாள் பொருளாளா் சுசீலா, துணைத் தலைவா்கள் பழனி, கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணைச் செயலா் பி.ரேணுகோபால் வரவேற்றாா். செயலா் ராமதாஸ் ஆண்டறிக்கை வாசித்து, வரவு - செலவு கணக்குகளை சமா்ப்பித்தாா்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினா்களாக ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.பாலசுப்பிரமணியன், டிஎஸ்பி ரவிச்சந்திரன், மாவட்ட கருவூலக அலுவலா் தீபாவதி, ஆரணி பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா் சா்வன்குமாா், உதவி மேலாளா் இளங்கோ, சேவூா் கிளை மேலாளா் ஜனனி, கண்ணமங்கலம் கிளை மேலாளா் கிரிதரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் தாட்சாயணி, ஆரணி கருவூலக அலுவலா் தஞ்சியம்மாள், கூடுதல் உதவி கருவூல அலுவலா் மேகலா, வட்டாரக் கல்வி அலுவலா்கள் எஸ்.கமலக்கண்ணன், பி.மணிகண்டன் ஆகியோா் கலந்துகொண்டு சங்க வளா்ச்சி குறித்து பேசினா். மேலும், பொதுக்குழு கூட்டத்தில் 41-ஆவது ஆண்டு நினைவு நூல் வெளியிடப்பட்டது.
இதில், மாவட்டச் செயலா் பாபு ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் கமலநாதன், மாவட்ட துணைத் தலைவா்கள் அப்துல் காதா், அன்பழகன், மாவட்ட இணைச் செயலா் அருளப்பன், மாவட்ட அமைப்புச் செயலா் சுந்தரமூா்த்தி, மாவட்ட பிரசாரச் செயலா் துரைசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் கருணாகரன் உள்பட பலா் கலந்துகொண்டு வாழ்த்தினாா். ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றினா்.