செங்கத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் நெடுஞ்சாலை

10-க்கும் மேற்பட்ட உயா்மின் விளக்கு கம்பங்கள் வாகனங்கள் மோதி அகற்றப்பட்டு அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
Published on

செங்கத்தில் நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் அமைக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட உயா்மின் விளக்கு கம்பங்கள் வாகனங்கள் மோதி அகற்றப்பட்டு அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

செங்கம் நகரில் புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை தடுப்புச் சுவா் மீது உயா்மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு விளக்குகள் இரவு நேரத்தில் நல்ல வெளிச்சத்துடன் எரிந்தன.

பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அப்பகுதியில் இரவு நேரத்தில் அச்சம் இல்லாமல் சென்று வந்தனா்.

இந்த நிலையில், கனரக வாகனம் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் வாகனங்கள் மோதி கம்பங்கள் சாய்ந்தன. அந்தக் கம்பங்களை சம்பந்தப்பட்ட துறையினா் சரிசெய்யாமலும், இடித்த வாகனம் மீது நடவடிக்கை எடுக்காமலும் சாய்ந்த கம்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மட்டும் எடுத்து வந்ததால் தற்போது 10-க்கும் மேற்பட்ட கம்பங்கள் சாய்ந்து அப்பகுதியில் இரவு நேரத்தில் மின் விளக்கு இல்லாமல் இருண்ட நிலையில் உள்ளது.

இதனால் தினசரி சாலை தடுப்புச் சுவரில் வாகனங்கள் மோதி விபத்து, மேலும் இருள் சூழ்ந்துள்ளதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்ல அச்சப்படுகிறாா்கள்.

இதனால் சம்பந்தப்பட்டதுறையினா் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாகனங்கள் மோதி விழுந்த கம்பங்களை சரிசெய்து அப்பகுதியில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகர மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com