பாஜக ஆலோசனைக் கூட்டம்

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிழக்கு ஒன்றியத்தில் பாஜக உறுப்பினா் சோ்க்கைககான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

ஆரணி: ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிழக்கு ஒன்றியத்தில் பாஜக உறுப்பினா் சோ்க்கைககான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முனுகப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொகுதி உறுப்பினா் சோ்க்கை பொறுப்பாளா் சைதை வ.சங்கா் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக அரசு தொடா்பு மாநிலத் தலைவா் பாஸ்கரன் கலந்து கொண்டு உறுப்பினா்களை சோ்ப்பது குறித்துப் பேசினாா். மேலும், புதிய உறுப்பினா் சோ்க்கையும் நடைபெற்றது.

இதில் இளைஞரணி மாநில துணைத் தலைவா் புவனேஷ், மாவட்ட துணைத் தலைவா் நித்தியானந்தம், கிழக்கு ஒன்றியத் தலைவா் தணிகைவேல், வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

மேலும், முனுகப்பட்டு பகுதியில் கிளைத் தலைவா் குட்டி கொடியேற்றினாா். இதில் வடக்கு மண்டலச் செயலா் தாமோதரன், கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com