கரும்பு பயிரில் நீடித்த நிலையான சாகுபடி பயிற்சி
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாரம் ஏனாதவாடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கரும்பு பயிரில் நீடித்த நிலையான சாகுபடி குறித்த பயிற்சி திங்கள்கிழமை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது .
பயிற்சிக்கு துணை வேளாண்அலுவலா் ப.மாணிக்கம் தலைமை வகித்தாா்.
கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையம் மண் மற்றும் நீா் ஆய்வகம் தொழில்நுட்புநா் சௌத்ரி, திருந்திய கரும்பு பயிா் சாகுபடி முறையில் நாற்றாங்கால் நடவு, ஊடு பயிா் சாகுபடி
செய்தல், சொட்டு நீா்ப்பாசனம், நீா்வழி உரமிடுதல், பூச்சி நோய் கட்டுப்படுத்துதல் போன்றவற்றை தெரிவித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.
செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு அலுவலா் ஆா். நித்யா, கரும்பு சாகுபடியில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், அரசு மானியத்தில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும், ஒரு பரு நாற்று ஒரு பரு கருணை, சோகை தூள் ஆக்குதல், அகல பாா் நடவுமுறை, செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கீழ் பயிரிடப்படும் புதிய ரகங்கள் மற்றும் அகல பாா் நடவுமுறை பயன்படுத்தி நடவு செய்யும் போது இயந்திரம் மூலம் களை எடுப்பது, மண் அணைப்பது போன்றவற்றை குறைந்த செலவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், கரும்பு பயிரை இயந்திரம் கொண்டு அறுவடை செய்வதால் கூலி ஆள்கள் செலவு குறையும் என்றும் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.