முன்னாள் படைவீரா்கள், கைம்பெண்களுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், கைம்பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடன் பெற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், கைம்பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடன் பெற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கவும், இவா்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளை அரசால் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

எனவே, சுயதொழில் தொடங்க விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், படைப் பணியின் போது மரணமடைந்த படைவீரா்களின் கைம்பெண்கள் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி விருப்பங்களை அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com