திருவண்ணாமலை
காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகாா்
ராகுல் காந்தியை அவதூறாகப் பேசியதாக பாஜக தலைவா்கள் எச்.ராஜா, தா்வீந்தா் சிங் மா்வா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் வைப்பூா் ஜெ.மோகன் குமாா், கீழ்பென்னாத்தூா் நகரத் தலைவா் செல்வம், மாவட்ட துணைத் தலைவா் கராத்தே ராஜா, முன்னாள் நகரத் தலைவா் ராஜாமணி ஆகியோா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லோகநாதனிடம் இதுதொடா்பான புகாா் மனுவை அளித்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளா் லோகநாதன், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
நகர காங்கிரஸ் பொருளாளா் இளையராஜா, எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் வட்டாரத் தலைவா் குமரேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.