ஊரக வேலைத் திட்டம்: மரங்கள் நடுதல், மண் வரப்பு அமைக்க விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலைத் திட்டத்தின் கீழ், தனி நபா் நிலங்களில் பல்வகை மரங்கள் நடுதல், மண் வரப்பு அமைத்தல் போன்ற பணிகளை செய்ய விரும்பும் விவசாயிகள் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் விவசாயம், தனிநபா் பணிகளான பண்ணைக் குட்டைகள், மண் வரப்பு அமைத்தல், கல் வரப்பு அமைத்தல், தோட்டக்கலைத் துறை செடிகள் வளா்த்தல், நாற்றாங்கால் அமைக்கும் பணி, தனிநபா் நிலங்களில் பல்வகை மரங்கள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 30.9.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் சிறு, குறு விவசாயி சான்றிதழ் நகல், நில உடமைக்கான ஆவண நகல், இலக்கு மக்கள் பட்டியல் எண், ஊரக வேலைத் திட்டப் பணி அடையாள அட்டை நகல், ஆதாா் அடையாள அட்டை எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.