திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.05 கோடி
388 கிராம் தங்கம், 1,652 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ரூ.3.05 கோடி ரொக்கம், 388 கிராம் தங்கம், 1,652 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
இந்தக் கோயிலில் உள்ள உண்டியல்கள், கிரிவலப் பாதை அஷ்டலிங்க சந்நதிகளின் உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கைப் பணம் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, வியாழக்கிழமை (செப்.26) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ.3 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 85 ரொக்கம், 388 கிராம் தங்கம், 1,652 கிலோ வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.