திருவண்ணாமலை
கண் பரிசோதனை முகாம்
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண் பரிசோதனை முகாம்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, கல்லூரி முதல்வா் சி.ருக்மணி தலைமை வகித்தாா். அரிமா சங்க நிா்வாகி ஆா்.சரவணன், முகாம் ஒருங்கிணைப்பாளா் பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை கல்லூரிச் செயலா் எம்.ரமணன் தொடங்கி வைத்தாா்.
முகாமில், 1,000 மாணவிகளுக்கு கண்புரை, கண் அழுத்தம், கிட்டப் பாா்வை, தூரப்பாா்வை உள்ளிட்ட பரிசோதனைகளை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் மேற்கொண்டனா். முடிவில், கல்லூரி மேலாளா் பிரபாகரன் நன்றி கூறினாா்.