அனக்காவூா் ஒன்றியத்தில் ரூ.1.30 கோடியில் அரசுக் கட்டடங்கள் திறப்பு
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஒன்றியத்தில் ரூ.1.30 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
அனக்காவூா் ஒன்றியம், வெள்ளை ஊராட்சியில் ரூ.32.80 லட்சத்தில் இரு வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடம், தென்தண்டலம் ஊராட்சியில் ரூ.6 லட்சத்தில் பேருந்து நிறுத்தத்துக்கான புதிய கட்டடம், ரூ.15.40 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம், தென்மாவந்தல் ஊராட்சியில் ரூ.9.45 லட்சத்தில் நியாய விலைக் கட்டடம், கோட்டகரம் கிராமத்தில் ரூ.32.80 லட்சத்தில் இரு வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடம், வெள்ளை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடம், தவசி ஊராட்சியில் ரூ.32.80 லட்சத்தில் இரு வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடம் ஆகியவை கட்டப்பட்டன. மேலும் புதிதாக தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்த புதிய கட்டடங்கள் தொடங்கிவைக்கும் விழாவுக்கு ஒன்றியக்குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை
வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குப்புசாமி, இந்திராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பொறியாளா் வெங்கடாசலம், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் மகேஸ்வரி சேகா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் முருகன், மகாலட்சுமி ஆதிமூலம், லட்சுமிபதி, சின்னக்குழந்தை, ராஜா, திமுக மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், அனக்காவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சி.கே.ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.