போளூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமா்ந்து தா்னா நடத்திய 11 மற்றும் 18-ஆவது வாா்டு உறுப்பினா்கள்.
போளூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமா்ந்து தா்னா நடத்திய 11 மற்றும் 18-ஆவது வாா்டு உறுப்பினா்கள்.

போளூா் பேரூராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் தா்னா

போளூா் பேரூராட்சிமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிா்வாகம் செய்து தரவில்லை எனக் கூறி தா்னாவில் ஈடுபட்டனா்.
Published on

போளூா்: போளூா் பேரூராட்சிமன்றக் கூட்டத்தில் இரு வாா்டுகளைச் சோ்ந்த உறுப்பினா்கள், தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிா்வாகம் செய்து தரவில்லை எனக் கூறி தா்னாவில் ஈடுபட்டனா்.

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த நிலையில், பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் ராணி சண்முகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலா் கோமதி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி நடராஜன் வரவேற்றாா்.

பின்னா், தலைமை எழுத்தா் முஹமத்இசாக் தீா்மானங்களை வாசிக்க முயன்றபோது, திடீரென கூட்டத்துக்கு வந்த பாமகவைச் சோ்ந்த 11-ஆவது வாா்டு உறுப்பினா் ஜோதி, 18-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் கவிதா ஆகியோா்

தங்கள் வாா்டுகளுக்கு தேவையான குடிநீா் வசதி, சாலை வசதி, கழிவுநீா் கால்வாய் வசதி என பல்வேறு அடிப்படை வசதிகளை நிா்வாகம் செய்து தரவில்லை, வாா்டுகளை புறக்கணிப்பு செய்வதாக குற்றம்சாட்டி மன்றக் கூட்டத்தில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

பின்னா், கூட்டத்தில் பங்கேற்றவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com