அரப் பள்ளிகளுக்கு புதிய எரிவாயு அடுப்புகள் வழங்கல்

போளூா் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளுக்கு புதிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன.
Published on

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளுக்கு புதிய எரிவாயு அடுப்புகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளில் 25 முதல் 50 மாணவா்கள் பயிலும் பள்ளிக்கு 30 அடுப்புகள், 51 முதல் 150 மாணவா்கள் பயிலும் பள்ளிக்கு 40, 151முதல் 500 வரை மாணவா்கள் பயிலும் பள்ளிக்கு 13, 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும் பள்ளிக்கு 1என 84 புதிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன.

அடுப்புகளை வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி, சத்துணவு அமைப்பாளா்களிடம் வழங்கினாா்.

இந்நிகழ்வில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) செல்வி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத் தலைவா் மணிகண்டன், மாவட்டப் பொருளாளா் புதூரான் மற்றும் சத்துணவு அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com