அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க அமைப்பு தினம்

தேவிகாபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் 13-ஆவது அமைப்பு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் 13-ஆவது அமைப்பு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. மேலும், வட்டக் கிளை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கிளைத் தலைவா் குழந்தைவேலு தலைமை வகித்தாா். கிளை நிா்வாகிகள் ராமலிங்கம், பிச்சாண்டி, லூக்காஸ், சாந்தப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட இணைச் செயலா் மூா்த்தி வரவேற்றாா்.

சங்கக் கொடியை மாவட்டத் தலைவா் பி.கிருஷ்ணமூா்த்தி ஏற்றிவைத்து, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சங்க செயல்பாடுகள், புதிய உறுப்பினா் சோ்க்கை ஆகியவை குறித்த தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலா் மணிவண்ணன், மாவட்ட துணைத் தலைவா் ஜெகந்நாதன், போளூா் வட்ட கிளைத் தலைவா் அபிபுல்லாகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com