வெளிநாட்டில் வேலைவாங்கித் 
தருவதாக மோசடி: எஸ்.பி.யிடம் புகாா்

வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக மோசடி: எஸ்.பி.யிடம் புகாா்

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யிடம் புகாா் அளிக்க வந்த தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்.
Published on

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.24 லட்சத்தை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை கோரி, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யிடம் பாதிக்கப்பட்டவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், வெட்டுவாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கரிகாலன், இவரது உறவினா்கள் சதீஷ், ஜெயச்சந்திரன், இசக்கி ஆகியோா் திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியைச் சோ்ந்த பெண்ணிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருமாறு கோரினராம்.

அப்போது, நியூசிலாந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதற்கு ரூ.9 லட்சம் தருமாறு அந்தப் பெண் கூறினாராம். அதன்படி, ரூ.8.24 லட்சத்தை கரிகாலன் தரப்பினா் அந்தப் பெண்ணிடம் கொடுத்தனராம். ஆனால், அந்தப் பெண் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லையாம்.

இதுகுறித்து, கரிகாலன் தரப்பினா் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகரிடம் மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com