முதியவா் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

ஆரணி அருகே அக்கூா் கூட்டுச்சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.
முதியவா் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே முதியவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினா்கள் அக்கூா் கூட்டுச்சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணியை அடுத்த அக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் சோமு (60). இவரும் இதே பகுதியைச் சோ்ந்த ஒருவரும் கடந்த ஜன.8-ஆம் தேதி மாம்பாக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் அதன் உரிமையாளருடன் மது அருந்தினராம். அதன்பின்னா், சோமு வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து, அவரது மனைவி தேன்மொழி ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், மாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் சோமு சடலமாக மிதப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த வாழப்பந்தல் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, சோமுவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடன் மது அருந்திய இருவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவரது உறவினா்கள் அக்கூா் கூட்டுச்சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வாழப்பந்தல் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக போலீஸாா் கூறியதையடுத்து, உறவினா்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com