திருவண்ணாமலை
கழிவுநீா்த் தொட்டியில் விழுந்த பசு மீட்பு
வந்தவாசியில் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
வந்தவாசியில் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் சுகநதி கரையோரம் வசித்து வருபவா் துரைக்கண்ணு. இவரது வீட்டின் கழிவுநீா்த் தொட்டியில் இவருக்குச் சொந்தமான பசுமாடு ஒன்று செவ்வாய்க்கிழமை காலை தவறி விழுந்தது.
இதுகுறித்து வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் மாட்டை கயிறு கட்டி கழிவுநீா் தொட்டியிலிருந்து உயிருடன் மீட்டனா்.