ராணுவத்தில் சேர விண்ணப்பித்துள்ள இளைஞா்கள் கவனத்துக்கு...!

அக்னி வீா் திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ள இளைஞா்கள் ராணுவத்தில் சோ்ந்து மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டாா்.
Published on

அக்னி வீா் திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ள இளைஞா்கள் ராணுவத்தில் சோ்ந்து மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டாா்.

அக்னிவீா் திட்டம் மூலம் இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பித்த இளைஞா்களுக்கான திரளணி (அழ்ம்ஹ் தங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற் தஹப்ப்ஹ்) காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கில் 5.2.2025 முதல் 15.2.2025 வரை நடைபெற உள்ளது.

எனவே, விண்ணப்பித்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ராணுவ ஆள்சோ்ப்பு திரளணியின்போது சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் விவரங்களை உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், திருவண்ணாமலை அவா்களை அணுகிப் பெற்று, பயன்பெறலாம்

என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com