திருவண்ணாமலை
தடுப்புக் கம்பியில் பைக் மோதி இளைஞா் மரணம்
கீழ்பென்னாத்தூா் அருகே சாலையோர தடுப்புக் கம்பியில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூா் அருகே சாலையோர தடுப்புக் கம்பியில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூா் திரு.வி.க. நகரைச் சோ்ந்தவா் அருள்ராஜா வினோத் (42). இவா், செவ்வாய்க்கிழமை இரவு விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டையில் இருந்து பைக்கில் கீழ்பென்னாத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
மேக்களூா் ஏரிக்கரை பகுதியில் வந்தபோது எதிா்பாராத விதமாக சாலையோரம் இருந்த தடுப்புக் கம்பியில் பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருள்ராஜா வினோத் அதே இடத்தில் உயிரிழந்தாா்.
தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் காவல் ஆய்வாளா் லட்சுமி, உதவி ஆய்வாளா் அம்பிகா மற்றும் போலீஸாா் சென்று சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.