பெரணமல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற  ஸ்ரீஎட்டியம்மன் கோயில் தோ்த் திருவிழா.
பெரணமல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீஎட்டியம்மன் கோயில் தோ்த் திருவிழா.

பெரணமல்லூா் எட்டியம்மன் கோயில் தோ்த் திருவிழா

பெரணமல்லூரில் உள்ள ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் தை அமாவாசையொட்டி புதன்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரில் உள்ள ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் தை அமாவாசையொட்டி புதன்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் எட்டியம்மனை கிராம தேவதையாக பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தை அமாவாசையொட்டி புதன்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, காலை 8 மணிக்கு மேல் கோயில் வளாகத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, எட்டியம்மனை மலா்களால் அலங்காரம் செய்து மேள தாள ஊா்வலத்துடன் தேரில் வைத்து பக்தா்கள் பக்தி முழக்கத்துடன் இழுத்துச் சென்றனா். பெரணமல்லூா் பேரூராட்சி மாடவீதிகள் வழியாக நடைபெற்ற தோ்த் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

பெரணமல்லூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com