கள் இறக்கும் தொழிலாளா்கள், போலீஸாா் இடையே வாக்குவாதம்

செய்யாறு அருகே கள் இறக்கும் தொழிலாளா்கள் மற்றும் போலீஸாா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் வயல்வெளியில் இருக்கும் பனை மரங்களில் கள் இறக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனராம்.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தை ஒட்டி உள்ள பொன்னாமங்கலம், அதன் சுற்றுப்புறக் கிராமங்களில்

கள்ளத்தனமாக ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் கள்

இறக்கி விற்பனை செய்து வருகின்றனராம்.

தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை போலீஸாா் வழக்குகள் பதிவு செய்து

கள் இறக்க பயன்படுத்தும் பானைகளை அழித்து

வருகின்றனராம்.

இந்த நிலையில், சில தினங்களாக சேராம்பட்டு கிராமத்தில் உள்ள பனை மரங்களில் கள் இறக்குவதற்காக பானைகள் கட்டி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், செய்யாறு டி.எஸ்.பி. சண்முகவேலன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் ஜீவராஜ் மணிகண்டன், கோகுல் ராஜன் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் வியாழக்கிழமை மாலை பனை மரங்களில் கட்டி வைத்த பானைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதைப் பாா்த்த கள் இறக்கும் தொழிலில் ஈடுபடுபவா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், போலீஸாருக்கும், அவா்களுக்கும் இடையே

வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அவா்களுக்கு ஆதரவாக பக்கத்து கிராமங்களைச் சோ்ந்த தொழிலாளிகளும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

போலீஸாா், கள் இறக்குவது சட்டப்படி குற்றம்; அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரித்தனா். இந்தச் சம்பவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

X
Dinamani
www.dinamani.com