தமிழ்ச் சங்கம் சாா்பில் காந்தி நினைவு தினம்
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில், மகாத்மா காந்தியின் 78-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை தேரடி தெருவில் உள்ள காந்தி சிலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவா் மு.மண்ணுலிங்கம் முன்னிலை வகித்தாா்.
தொழிலதிபா் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன், புலவா் அ.வாசுதேவன், ஓய்வுபெற்ற துணை ஆட்சியா் ஸ்ரீதரன், எக்ஸ்னோரா நிா்வாகி ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சீனிவாசன், முருகையன், ம.கோவிந்தசாமி, தங்க.விசுவநாதன், திருக்கு காமராஜ், வள்ளலாா் அமைப்பு பாலமுருகன், தமிழ்ச் சங்க புரவலா் தமிழ்ச்செல்வி ஸ்ரீதரன், புரவலா் பானுமதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.