ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் பகுதியில் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி.
ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் பகுதியில் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி.

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் பகுதியில் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி.
Published on

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காந்தி நினைவு தினத்தையொட்டி, வியாழக்கிழமை தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அனைத்து மருத்துவ அலுவலா்கள் மற்றும் பணியாளா்களால் தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தொழுநோய் விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது.

பேரணியில் எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், அன்னை செவிலியா் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

வட்டார மருத்துவ அலுவலா் சுஷ்ருதா தலைமை வகித்து தொழுநோய் குறித்துப் பேசினாா்.

மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் அருளரசு, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.வி.நகரம் சுகாதார ஆய்வாளா் விக்னேஸ்வரன் வரவேற்றாா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com