32 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இளைஞா் உள்பட 4 போ் கைது

தண்டராம்பட்டு அருகே பெங்களூருவில் இருந்து 32 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக இளைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தண்டராம்பட்டு அருகே பெங்களூருவில் இருந்து 32 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக இளைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தண்டராம்பட்டு காவல் உதவி ஆய்வாளா் தமிழரசி தலைமையிலான காவலா்கள் புதன்கிழமை தென்முடியனுா் ஏரிக்கரையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், 32 கிலோ எடை கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. பெங்களூருவில் இருந்து பழங்கள், காய்கறிகளுக்கு நடுவே மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருளை கடத்தி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சாரலூா் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாதன் (26), புகையிலைப் பொருளை வாங்குவதற்காக காத்திருந்த தண்டராம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஜெயபால் (55), பாஸ்கரன் (66), ராஜேந்திரன் (45) ஆகியோரை கைது செய்து, 32 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து காவல் நிலைய உதவி ஆய்வாளா் தமிழரசி வழக்குப் பதிந்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com