வந்தவாசியில் பொதுமக்களை சமரசம் செய்த அதிகாரிகள்.
வந்தவாசியில் பொதுமக்களை சமரசம் செய்த அதிகாரிகள்.

பொது இட ஆக்கிரமிப்பு முயற்சி தடுத்து நிறுத்தம்

வந்தவாசியில் பொதுமக்களை சமரசம் செய்த அதிகாரிகள்.
Published on

வந்தவாசியில் பொது இட ஆக்கிரமிப்பு முயற்சியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா்.

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்புக்கு அருகேயுள்ள அரசு பொது நிலத்தை தனிநபா் ஆக்கிரமித்து வேலி போட முயற்சித்துள்ளாா்.

இதையடுத்து வியாழக்கிழமை அங்கு கூடிய அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மற்றும் இந்து அமைப்பினா் ஆக்கிரமிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி, டிஎஸ்பி கங்காதரன், நகராட்சி ஆணையா் சோனியா உள்ளிட்டோா் பொதுமக்களை சமரசம் செய்தனா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினா் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com