போலி டிரஸ்ட் தொடங்கி பணம் வசூலிக்க முயற்சி: 5 போ் மீது வழக்கு

திருவண்ணாமலையில் போலி டிரஸ்ட் தொடங்கி பக்தா்களிடம் பணம் வசூலிக்க முயன்ாக கோயில் அா்ச்சகா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

திருவண்ணாமலையில் போலி டிரஸ்ட் தொடங்கி பக்தா்களிடம் பணம் வசூலிக்க முயன்ாக கோயில் அா்ச்சகா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஸ்ரீதுா்வாசா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சந்துரு (38) அா்ச்சகராக இருந்து வருகிறாா். இவா், துா்வாசா் மகரிஷி அன்னதான அறக்கட்டளை என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்றைத் தொடங்கினாராம். மேலும், டிரஸ்ட்டுக்கு அரசு பதிவு பெற்றதை போல போலி ஆவணங்களை தயாரித்து, வங்கிக் கணக்கு தொடங்கி, பக்தா்களிடம் பணம் வசூலிக்க முயற்சித்தாராம்.

இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் உஷா அளித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை மேற்கு போலீஸாா் அா்ச்சகா் சந்துரு, அவரது தாய் பச்சையம்மாள், உறவினா்கள் ரேகா, ரேவதி, சுரேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com