ஐயப்ப சேவா சங்க மாவட்டக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட சபரிமலை ஐயப்ப சேவா சங்க கூட்டம் புதுப்பாளையம் சிவசுப்பிரமணியா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

திருவண்ணாமலை மாவட்ட சபரிமலை ஐயப்ப சேவா சங்க கூட்டம் புதுப்பாளையம் சிவசுப்பிரமணியா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா்கள் ஹரிகிருஷ்ணன், குமரன், மாவட்டச் செயலா் மகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சிவா வரவேற்றாா்.

புதுப்பாளையம் பகுதியில் வாராந்திர யோகம் மற்றும் உத்திர பூஜை, நிரஞ்சன பூஜை நடத்துவது. டிசம்பா் 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஏரிமலையில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்பது. அன்னதானத்துக்குத் தேவையான பொருள்களை திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் மூலம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்து, அந்த அன்னதானத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட ஐயப்ப சேவா சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com