உங்களுடன் ஸ்டாலின் முகாம் இணைப்பு
செய்யாறு
செய்யாறு ஒன்றியத்தில் மேல்சீசமங்கலம், பலாந்தாங்கல், திருமணி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மேல்சீசமங்கலம் கிராமத்தில் கிராமத்தில் நடைபெற்றது.
தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி தலைமை வகித்தாா். செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.பரமேஸ்வரன் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்திராக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
இம்முகாமின் போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மகளிா் உரிமைத்தொகை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 435 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.
புலிவலம் கிராமத்தில்...
வெம்பாக்கம் ஒன்றியம், அரியூா், பனமுகை, புலிவலம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா்.
வெம்பாக்கம் வட்டாட்சியா் தமிழ்மணி முன்னிலை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கரன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்திராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
இம்முகாமின் போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மகளிா் உரிமைத்தொகை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 459 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் த.ராஜி, திமுக ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், எம்.தினகரன், சு.ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

