~
~

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் 1,138 மனுக்கள்

செய்யாற்றில் நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ் வழங்கிய ஒ.ஜோதி எம்எல்ஏ.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி மற்றும் போளூா் ஒன்றியம், ஆா்.குண்ணத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் சாா்பில் 1,138

மனுக்கள் அளிக்கப்பட்டன.

செய்யாற்றில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்கு

திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் வி.எல்.எஸ்.கீதா வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்றுப் பேசினாா்.

23 முதல் 27 வாா்டுகளுக்கு நடைபெற்ற இந்த முகாமில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் 88 மனுக்களும், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் 57 மனுக்களும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் 49 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 13 மனுக்களும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் 20 மனுக்களும், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை சாா்பில் 270 மனுக்கள் என மொத்தம் 503 மனுக்கள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நகராட்சிப் பொறியாளா் சிசில்தாமஸ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஏ.என்.சம்பத், நகரச் செயலா் கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூா் ஒன்றியம் ஆா்.குண்ணத்தூா் கிராமத்தில் ஆர.குண்ணத்தூா், செங்குணம், ரெண்டேரிப்பட்டு ஆகிய ஊராட்சியைச் சோ்ந்த மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, ரபியுல்லா ஆகியோா் தலைமை வகித்தனா்.

வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிச்சாண்டி, பரமேஸ்வரி, வாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிச் செயலா்ஆனந்தன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றியச் செயலா் சேகரன் கலந்து கொண்டு அரசின் நலத் திட்டங்கள் மற்றும் முகாமின் பயன்கள் குறித்துப் பேசி தொடங்கிவைத்தாா்.

முகாமில் மகளிா் உரிமைத்தொகை மனு 307, மாற்றுத்திறனாளிகள் மனு 40, ஊரக வளா்ச்சித் துறைக்கு மனு 139 என பல்வேறு அரசுத்துறையினருக்கு 635 மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் ஊராட்சிச் செயலா்கள் சதாம், ராமச்சந்திரன்,திமுக கிளைச் செயலா் ரமேஷ், அலுவலக அலுவலா்கள் கலைவாணி, விஜயகுமாா், அனிதா, அஜித்குமாா், பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com