கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பை கைப்பந்துப் போட்டி தொடக்கம்

கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பை கைப்பந்துப் போட்டி தொடக்கம்

திருவண்ணாமலை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
Published on

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின. மாவட்ட ஆட்சியா் போட்டிகளை தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பை கைப்பந்துப் போட்டிகள் அக்.8 முதல் அக்.11 வரை நடைபெறுகிறது. இதில், 38 மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில்

நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.8 லட்சமும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

போட்டி தொடக்க விழா நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் (பொ) சண்முகப்பிரியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com