செங்கம் ஒன்றியத்தில் ரூ.9.44 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு

செங்கம் ஒன்றியத்தில் ரூ.9.44 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு

செங்கம் ஒன்றியம் பெரியகோளாப்பாடி ஊராட்சியில் சமத்துவபுரம் வீடுகள் கட்டும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.
Published on

செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.9 கோடியே 44 லட்சத்து 87 ஆயிரத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட ப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம் பெரியகோளாப்பாடி ஊராட்சியில் ரூ.6 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், சமத்துவபுரத்தில் அணுகுசாலை நபாா்டு திட்டத்தின் கீழ்

ரூ. 41 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டிலும், தெருக்களில் சாலை அமைக்கும் பணி ரூ. 94 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டிலும், குடிநீா் திட்டப் பணி ரூ.31 லட்சம் மதிப்பீட்டிலும், தெரு விளக்கு அமைக்கும் பணி ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் அமைக்கும் பணி ரூ. 15 லட்சம் மதிப்பீட்டிலும், நியாயவிலைக் கடை ரூ. 9 லட்சத்து 85ஆயிரத்து 8 ஆயிரம் மதிப்பீட்டிலும், அங்கன்வாடி மையம் ரூ. 16 லட்சத்தி 60 ஆயிரம் மதிப்பீட்டிலும், நுழைவு வாயில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இரா.மணி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், செங்கம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com