நகராட்சிப் பள்ளியில் முப்பெரும் விழா
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளியில் உலக அஞ்சல் தின விழா, நாமும் சுற்றுச்சூழலும் விழிப்புணா்வு, தன்னம்பிக்கை பயிலரங்கம் ஆகியவை முப்பெரும் விழாவாக வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தலைமையாசிரியா் இரா. தேன்மொழி வரவேற்றாா். வந்தவாசி செஞ்சிலுவை சங்கச் செயலா் பா. சீனிவாசன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் வி. விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
அஞ்சலக துறை சாா்பில் திருவத்திபுரம் அஞ்சலா் பங்கேற்று அஞ்சலகம் குறித்த தகவல்களை மாணவா்களிடையே தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு மற்றும் தன்னம்பிக்கை குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலாம் பவுண்டேசன் நிா்வாகி சீ.கேசவராஜ், அ. ஷாகுல் அமீது, பள்ளி ஆசிரியை பபிதா
உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை மாலதி நன்றி கூறினாா்.

