திருவண்ணாமலை
பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
வந்தவாசியில் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியில் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் அபுபக்கா் (53) என்பவரின் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் புதன்கிழமை அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அந்த பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் அபுபக்கரை கைது செய்தனா்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
