போளூா் மயானத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போளூா் மயானத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட போளூா் மயானத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள்.
Published on

போளூரில் கருணீகா், ஆச்சாரி பிரிவினருக்கு சொந்தமான மயானத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வேலூா் சாலை அருகே கருணீகா், ஆச்சாரி ஆகிய இரு பிரிவினருக்கு சொந்தமாக சுமாா் 25 சென்ட் பரப்பில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை சிலா் ஆக்கிரமித்து வீடு மற்றும் கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனா்.

இதனால், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் நீதிமன்றத்தில்

மயான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி மனு தாக்கல் செய்தனா். இதில், மயான ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு நீதிமன்றம் சாா்பில் நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளனா்.

இதன்படி நகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்பாளா்களுக்கு 30 நாள்கள் வரை அவகாசம் வழங்கி இருந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றாததால், நகராட்சி ஆணையா் ஸ்ரீநிவாசன், டிஎஸ்பி மனோகரன், வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, நிலஅளவையா் உமாநாத் முன்னிலையில் இடத்தை அளவீடு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com