திருவண்ணாமலை
விஷப் பூச்சி கடித்து விவசாயி உயிரிழப்பு
வந்தவாசி அருகே விஷப்பூச்சி கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த ஜப்திகாரணி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜ்குமாா் (48). கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவா் தண்ணீா் பாய்ச்ச நிலத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது இவரை விஷப் பூச்சி கடித்துள்ளது.
இதில் மயக்கமடைந்தவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
