திருவண்ணாமலை
பெண்ணைத் தாக்கி மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு
வந்தவாசி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
வந்தவாசி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியம்மாள் (49). இதே தெருவில் வசிக்கும் ராணி, கடந்த செப்.30-ஆம் தேதி முனியம்மாள் வீட்டின் அருகே கழிவுநீரை கொட்டினாராம். இதனால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, முனியம்மாளை ராணி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த முனியம்மாள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து முனியம்மாள் அளித்த புகாரின்பேரில், ராணி மீது வந்தவாசி வடக்கு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
