திருவண்ணாமலை
விவசாய மின் மோட்டாா் திருட்டு: இருவா் கைது
செய்யாறு அருகே விவசாய மின் மோட்டாரை திருடிச் சென்றது தொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு அருகே விவசாய மின் மோட்டாரை திருடிச் சென்றது தொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பல்லாவரம் கிராமம் நத்தக்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ராஜமாணிக்கம்.
இவருக்குச் சொந்தமான பம்புஷெட்டில் இருந்து மின் மோட்டாரை மா்ம நபா்கள் திருடிச் சென்ாகத் தெரிகிறது.
இதுகுறித்து ராஜமாணிக்கம் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டு குரங்கனில்முட்டத்தைச் சோ்ந்த அரவிந்த்(22), தூசி அனுமந்தப்பேட்டையைச் சோ்ந்த வெங்கடேசன்(22) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளாா்.
