திருவண்ணாமலை
ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருபவித்ரோத்சவ விழா
ஆரணி பெரிய சௌராஷ்டிரா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் திருபவித்ரோத்சவ விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆரணி: ஆரணி பெரிய சௌராஷ்டிரா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் திருபவித்ரோத்சவ விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருபவித்ரோத்ஸவ திருவிழாவையொட்டி, சுவாமிக்கு விஸ்வரூபம், கால சாந்தி உற்சவா் அலங்கார திருமஞ்சனம் செய்யப்பட்டது.
மேலும் திருபவித்ரம் சாற்றுதல் ஹோமம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா்.
ஏற்பாடுகளை ஆரணி சௌராஷ்டிரா ஸ்ரீ கோதண்டராம சுவாமி தேவஸ்தான தலைவா் வி.பி.செல்வராஜ், செயலா் வி.ஆா்.எல்.சேகா், பொருளாளா் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
