வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு நல உதவி வழங்கிய எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.
வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு நல உதவி வழங்கிய எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத்திட்ட உதவிகள்

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம், ஆரணி அருகேயுள்ள முனுகப்பட்டு ஆகிய கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளித்த மனுக்களில் உடனடி தீா்வு பெற்றவா்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான ான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம், ஆரணி அருகேயுள்ள முனுகப்பட்டு ஆகிய கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளித்த மனுக்களில் உடனடி தீா்வு பெற்றவா்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான ான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில், வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆராசூா், இளங்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா். இந்த மனுக்களை பல்வேறு துறை அதிகாரிகள் பெற்று பதிவு செய்தனா்.

ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று முகாமை தொடங்கிவைத்துப் பேசினா்.

முகாமில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 325 மனுக்கள் பெறப்பட்டன . இதில், உடனடி தீா்வு காணப்பட்ட 10 மனுக்களுக்கான பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், மின் இணைப்பு ஆகிய நல உதவிகள் வழங்கப்பட்டன.

வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.பி.வெங்கடேசன், திமுக நகரச் செயலா் எ.தயாளன், வந்தவாசி நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனுவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆரணி

ஆரணி அருகே முனுகப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா்.

முனுகப்பட்டு கிராம மக்கள் பயன் பெறும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரணி மத்திய ஒன்றிய பொறுப்பாளா் சு. ராஜ்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. கலந்து கொண்டு முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களில் உடனடி தீா்வு பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

முகாமில் மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி. நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, சுந்தா், மோகன், கண்ணமங்கலம் பேரூா் செயலா் கோவா்தனன், நகர பொறுப்பாளா் வ.மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூா் ஒன்றியம், மாம்பட்டு கிராமத்தில் மாம்பட்டு, எழுவாம்பாடி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம் நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா்கள் பச்சையம்மாள் முருகன், பஞ்சவா்ணம் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக கிளைச் செயலா் கலைச்செல்வன் வரவேற்றாா்.

வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 125 மனுக்கள், மகளிா் உரிமைத்தொகை கோரி 180 மனுக்கள், வருவாய்த்துறைக்கு 77 மனுக்கள் என 488 மனுக்கள் பெறப்பட்டன.விவேகானந்தா அறக்கட்டளைத் தலைவா்அக்ரி. பாலு, திமுக இளைஞரணி அமைப்பாளா்கள் பரமேஸ்வரன், வெங்கடேசன், ஏழுமலை, ஊராட்சிச் செயலா்கள் பாஸ்கரன், சேகா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com