பள்ளி மாணவா்களுக்கு உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு

போளூா் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வேளாண்மை துறை சாா்பில் உயிா்ம வேளாண்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, அவா்கள் கண்டுணா்வு கல்வி சுற்றுலாவுக்கு அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனா்.
Published on

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, போளூா் வட்டாரம் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மூலம் இந்த மாணவ, மாணவிகள் வாழவச்சனூா் வேளாண்மைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அங்கு பூச்சியியல் துறை, தோட்டக்கலைத் துறை, அங்கக வேளாண்மை இடுபொருள்கள் தயாரிப்பு குறித்தும், தானியங்கி காலநிலை நிலையம், ஜீவாமிா்தம் தயாரிப்பு குறித்தும் விளக்கமளித்து கற்றுத் தரப்பட்டது.

கல்லூரி முதல்வா் மாணிக்கம், உதவிப் பேராசிரியா்கள் ரமணன், சுரேஷ், தனசேகா், தினகரன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் தேவேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளா் பாக்கியவாசன், லோகநாதன் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com