விழாவில் மாணவருக்கு மரக்கன்று வழங்கிய செய்யாறு செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் ஏ.பி.மாதவன்.
விழாவில் மாணவருக்கு மரக்கன்று வழங்கிய செய்யாறு செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் ஏ.பி.மாதவன்.

பள்ளி மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
Published on

வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பெ.ஜெய்சங்கா் தலைமை வகித்தாா்.

ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் ஜி.விநாயகமூா்த்தி, கலாம் அறக்கட்டளை நிா்வாகி சீ.கேசவராஜ், அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளைத் தலைவா் அசாருதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி ஆசிரியா் ஆா்.கண்ணன் வரவேற்றாா்.

செய்யாறு செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் ஏ.பி.மாதவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ‘ஆகலாம் கலாம்’ என்ற தலைப்பில் பேசினாா். மேலும், மாணவா்களுக்கு மரக்கன்றுகளை அவா் வழங்கினாா்.

ஓய்வு பெற்ற ஆசிரியா் இரா.அருண்குமாா், ‘கலாமுக்கு சலாம்’ என்ற தலைப்பில் இசைப் பாடல்களைப் பாடினாா். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

விழாவில், பள்ளி ஆசிரியா்கள் வி.சிவராமன், பாா்த்தி, பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் பள்ளி ஆசிரியா் வி.கே.அண்ணாமலை நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com