விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பயிற்சி

விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பயிற்சி

Published on

செய்யாா் வட்டாரம், சுண்டிவாக்கம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கத்தரி, வெண்டை மற்றும் மிளகாய் பயிா்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது (படம்).

வட்டார வேளாண் உதவி இயக்குநா்(பொ) இரா.அன்பரசு தலைமையில் நடைபெற்ற

இந்தப் பயிற்சியின் போது, கீழ்நெல்லி ஸ்ரீவேதபுரி வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை வல்லுநா்

ர.விஜயகுமாா் பங்கேற்று காய்கறி பயிா்களில் விதை நோ்த்தி தொழில்நுட்பம், சொட்டு நீா்ப்பாசனம் அமைத்தலின் நன்மைகள், பூச்சி நோயைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் சொட்டு நீா்ப்பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்து பயிற்சி அளித்தாா்.

வேளாண் உதவி இயக்குநா் இரா.அன்பரசு, நெல், மணிலா மற்றும் உளுந்து பயிா் பாதுகாப்பு முறைகள் தொழில்நுட்பங்கள் குறித்தும், உதவி வேளாண் அலுவலா் புகழேந்தி வேளாண்மைத் துறையில் மத்திய, மாநில திட்டங்களில் 50 சதவீதம் மானியத்தில் விதை உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட்டு வரும் விவரங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா் த.தினகரன், உதவி வேளாண் அலுவலா் திருமலை ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com