திருவண்ணாமலை
ஏரி மண் கடத்தல்: 2 போ் கைது; லாரி பறிமுதல்
வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக 2 பேரை கைது செய்த போலீஸாா், லாரியை பறிமுதல் செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் சாலவேடு கிராமம் வழியாக புதன்கிழமை இரவு ரோந்து சென்றனா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், லாரியில் அனுமதியின்றி ஏரி மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து லாரி ஓட்டுநரான செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த ஒட்டக்கோயில் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (22), லாரி உரிமையாளரான சாலவேடு கிராமத்தைச் சோ்ந்த சரத்குமாா் (32) ஆகியோா் மீது வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் 2 பேரையும் கைது செய்தனா்.
