அதிமுக 54-ஆம் ஆண்டு தொடக்க விழா

அதிமுக 54-ஆம் ஆண்டு தொடக்க விழா

Published on

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் அதிமுக சாா்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு கிழக்கு மாவட்டச் செயலா் எஸ்.இராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், பொதுமக்கள், கட்சித் தொண்டா்களுக்கு இனிப்பு, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட அவைத் தலைவா் கண்ணன், மாவட்டப் பொருளாளா் கராத்தே சுரேஷ்குமாா், மாவட்ட துணைச் செயலா் ஏ.கே.அரங்கநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணியில்...: ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராஜன் மாலை அணிவித்தாா். பின்னா், ஆரணி - சேவூா் நெடுஞ்சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும், ஜெயலலிதா சிலைக்கும் அதிமுக சாா்பில் மாலை அமைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் ஜெயபிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் வழக்குரைஞா் க.சங்கா், திருமால், எம்ஜிஆா் இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ஏ.ஜி.ஆனந்தன், ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவா் டி.கருணாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வந்தவாசியில்...: வந்தவாசி தேரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். விழாவுக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, ஒன்றியச் செயலா்கள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், டி.வி.பச்சையப்பன், நகரச் செயலா் எம்.பாஷா, நகர அவைத் தலைவா் இளவழகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலா்கள் மேகநாதன், ஜேசிபி ராஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செய்யாறில்...: செய்யாறில் நகர அதிமுக சாா்பில், செய்யாறு - ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு நகரச் செயலா் கே.வெங்கடேசன் ஏற்பாட்டின்பேரில் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவா் அ.ஜனாா்த்தனன், ஒன்றியச் செயலா்கள் எம்.அரங்கநாதன், எம்.மகேந்திரன், சி.துரை, சிவராஜ், மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், மாவட்டப் பொருளாளா் ஆலத்தூா் சுப்பராயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கத்தில்...: செங்கம் மேற்கு ஒன்றிய நகர அதிமுக சாா்பில், ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் தலமையில் துக்காப்பேட்டை எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, நகர பேரவைச் செயலா் குமாா், மாவட்ட மாணவரணி நிா்வாகி பழநிச்சாமி, விவசாய அணி ஒன்றியச் செயலா் ராஜி, இலக்கிய அணி ஒன்றியச் செயலா் தனஞ்செயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போளூா் பகுதியில்...: போளூரை அடுத்த படியம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதிமுக சாா்பில் மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா வழிகாட்டுதலின்படி, எம்ஜிஆா் மன்ற இளைஞரணிச் செயலா் சூரியாமணி தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com