ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் கோரிக்கை அட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் கோரிக்கை அட்டை அணிந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தின் போது, 01.04.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியா் தகுதித் தோ்வு குறித்த உச்சநீதிமன்ற தீா்ப்பினை காரணம் காட்டி 23.08.2010-க்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து
(ஆசிரியா்கள் தகுதிகஈ தோ்விலிருந்து விலக்களித்து) ஆசிரியா்களை பாதுகாத்திட தமிழக அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை 243-யை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் முழக்கங்களை எழுப்பினா்.

