சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து காா்  விபத்து

சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து காா் விபத்து

Published on

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே சாலையோரப் பள்ளத்தில் காா் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 போ் காயமடைந்தனா்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவா், தனது மனைவி அனுராதா, உறவினா் வாசுதேவன் ஆகியோருடன் உறவினா் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் வந்தவாசியை அடுத்த சு.நாவல்பாக்கம் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். காரை சீனிவாசன் ஓட்டினாா்.

மேல்மருவத்தூா் - வந்தவாசி சாலையில் பிருதூா் புறவழிச் சாலையில் இவா்களது காா் சென்றபோது, நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் சிக்கிய 3 பேரையும் வந்தவாசி தீயணைப்புத் துறையினா் மீட்டனா். இந்த விபத்தில் காயமடைந்த சீனிவாசன், வாசுதேவன்

ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com