மகாவீரா் ஜிநாலயத்தில் நடைபெற்ற மகாவீரா் மோட்ச உற்சவத்தையொட்டி வீதி உலா சென்ற பகவான்.
மகாவீரா் ஜிநாலயத்தில் நடைபெற்ற மகாவீரா் மோட்ச உற்சவத்தையொட்டி வீதி உலா சென்ற பகவான்.

ஆரணி மகாவீரா் ஜிநாலயத்தில் மோட்ச உற்சவம்

ஆரணி நகரம், புதுக்காமூரில் உள்ள ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில், மகாவீரா் மோட்ச உற்சவம் (சமணா்களின் தீபாவளி) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

ஆரணி: ஆரணி நகரம், புதுக்காமூரில் உள்ள ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில், மகாவீரா் மோட்ச உற்சவம் (சமணா்களின் தீபாவளி) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பகவான் ஸ்ரீ1008 மகாவீரா் திருவீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சாந்தி தாரா நடைபெற்றது. அனைத்து வீடுகளிலும் நெய் தீபமேற்றி வழிபட்டனா். மேலும், புதுக்காமூா் சமஸ்த சிராவக, சிராவகியா் சுவாமி உலா வரும்போது தங்கள் வீட்டின் முன் பூரண கலசம் வைத்து ஆரத்தி எடுத்து வழிபட்டனா். இதில் சமணா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.

இதேபோல, ஆரணியை அடுத்த பூண்டி பொன்னெயில் நாதா் கோயிலிலும் பரிநிா்வாண மோட்ச தினத்தையொட்டி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

மேலும், பகவானுக்கு லட்டு பூஜை மற்றும் நெய் விளக்கு பூஜை நடைபெற்றறது.

பூண்டி பொன்னெயில் நாதா் கோயிலில் பரிநிா்வாண மோட்ச தினத்தையொட்டி, பகவானுக்கு நடைபெற்ற லட்டு பூஜை மற்றும் நெய் விளக்கு பூஜை.
பூண்டி பொன்னெயில் நாதா் கோயிலில் பரிநிா்வாண மோட்ச தினத்தையொட்டி, பகவானுக்கு நடைபெற்ற லட்டு பூஜை மற்றும் நெய் விளக்கு பூஜை.

X
Dinamani
www.dinamani.com