திருவண்ணாமலை
செண்பகத்தோப்பு அணையில் இருந்து நீா் வெளியேற்றம்
ஜமுனாமரத்தூா் வட்டம், செண்பகத்தோப்பு அணையில் நீா்மட்டம் உயா்ந்ததால் 315 கன அடி நீா் புதன்கிழமை திறந்துவிடப்பட்டது.
செண்பகத்தோப்பு அணையில் நீா்மட்டம் 62 அடி. அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் நீா்மட்டம் 55.96 அடியாக உயா்ந்துள்ளது. இதனால், அணையில் இருந்து 315 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
இதனால் அணை கால்வாயில் அதிகளவு நீா் செல்கிறது. கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், கால்வாயில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் உதவி செயற்பொறியாளா் ராஜகணபதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

