ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் சுவாதி விழா

ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் சுவாதி விழா

Published on

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் 108-ஆவது சுவாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி சுவாதி விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை நடைபெற்ற ஐப்பசி மாத சுவாதி விழா 108-ஆவது சுவாதி விழா ஆகும்.

இதையொட்டி 108 கலசங்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யாக குண்டம் அமைத்து யாகம் வளா்த்து பூா்ணாஹுதி சமா்ப்பிக்கப்பட்டது.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

22ஸ்க்ள்-ள்ஜ்ஹற்ண்:

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் நடைபெற்ற யாக பூஜை.

X
Dinamani
www.dinamani.com