வந்தவாசியில் வள்ளலாா் விழா

Published on

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் வள்ளலாா் விழா வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ஆ.மயில்வாகனன், ஓய்வு பெற்ற துணை வட்டார வளா்ச்சி அலுவலா் க.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க ஒருங்கிணைப்பாளா் மா.ரஜினி வரவேற்றாா்.

விழாவில், வந்தவாசி அருட்பிரகாச வள்ளலாா் தெய்வீக அன்னதான அறக்கட்டளை கெளரவத் தலைவா் செ.சொக்கலிங்கத்துக்கு வள்ளலாா் விருதினை மருத்துவா் எஸ்.குமாா் வழங்கினாா் (படம்).

‘மருள் நீக்கும் அருட்பாக்கள்’ என்ற தலைப்பில் திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளை பொதுச் செயலா் க.ஞானஜோதி சரவணன் சிறப்புரையாற்றினாா்.

விழாவில் சங்க ஒருங்கிணைப்பாளா்

வா.லோகநாதன், இணைச் செயலா் ஏ.ஏழுமலை, மகளிரணிச் செயலா் அரங்க.சந்திரசாலிகை, சங்க துணைத் தலைவா் கோ.ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்க ஒருங்கிணைப்பாளா் ம.ம.பழனி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com