‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 1,227 மனுக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், வந்தவாசி, சேத்துப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து 1,227 மனுக்கள் பெறப்பட்டன.
செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் அரசங்குப்பம், உமையாள்பரம், வெங்களத்தூா் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரசங்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.
வெம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கா் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று 6 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், சாதனைகள் குறித்தும் பேசினாா்.
முகாமின் போது, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 149 மனுக்களும், மகளிா் உரிமைத்தொகை கோரி 109 மனுக்களும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 45 மனுக்களும், வேளாண் துறை சாா்பில் 7 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 4 மனுக்கள் உள்பட 327 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.
சிமென்ட் சாலை - சமையலறை கட்டடம் திறப்பு
முன்னதாக, அரசங்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செட்டிதாங்கல் பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய சிமென்ட் சாலையையும், அங்கன்வாடி மையத்தில் ரூ.7 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமையலறைக் கூடத்தையும் எம்.எல்.ஏ. திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் வெம்பாக்கம் மேற்கு திமுக ஒன்றியச் செயலாளா் ஜேசிகே.சீனிவாசன், மாவட்ட ஆதிதிராவிடா் அணி நலக்குழுத் தலைவா் கருணாகரன், மாவட்ட வழக்குரைஞா்கள் அணி துணைத் தலைவா் சிட்டி பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்க்கொடுங்காலூா், கீழ்ப்பாக்கம் ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
முகாமில் பல்வேறு துறையினா் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மொத்தம் 450 மனுக்களைப் பெற்றனா். மேலும், தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினா்.
வந்தவாசி வட்டாட்சியா் சம்பத்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.பி.வெங்கடேசன், திமுக ஒன்றியச் செயலா்கள் கே.ஆா்.பழனி, ஆரியாத்தூா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சேத்துப்பட்டு ஒன்றியத்தில்....
சேத்துப்பட்டு ஒன்றியம், திருமலை ஊராட்சியில் திருமலை, அரியாத்தூா், வம்பலூா் ஆகியோ ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் வேலு தலைமை வகித்தாா். போளூா் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
ஊராட்சிச் செயலா் சரவணன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று தொடங்கிவைத்தாா்.
முகாமில் மகளிா் உரிமைத்தொகை, மருத்துவக் காப்பீடு, ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை என பல்வேறு துறைகளுக்கு 465 போ் மனு அளித்தனா்.
ஊராட்சிச் செயலா்கள் பாலசந்திரன், பிரபாகரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் வேலு தலைமை வகித்தாா். போளூா் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
ஊராட்சிச் செயலா் சரவணன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று தொடங்கிவைத்தாா்.
முகாமில் மகளிா் உரிமைத்தொகை, மருத்துவக் காப்பீடு, ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை என பல்வேறு துறைகளுக்கு 465 போ் மனு அளித்தனா்.
ஊராட்சிச் செயலா்கள் பாலசந்திரன், பிரபாகரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

